meta pixel
share-icon

00:00
00:00

மெலூஹாவின் அமரர்கள் : சிவா முத்தொகுதி - 1 in tamil | undefined undefined मे |  Audio book and podcasts

மெலூஹாவின் அமரர்கள் : சிவா முத்தொகுதி - 1 in தமிழ்

5.0*
Share Kukufm
7+
43 K Listens
AuthorDurairaj Vijayarangan
இது ஒரு மனிதனின் கதை. காலம், தெய்வமாய் மாற்றிய ஒரு மாமனிதனின் கதை. ஒரு காலத்தில் புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய மெலூஹாவின் ஆட்சியாளர்களான சூர்யவம்சிகள், பல ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திரவம்சிகளிடமிருந்து, பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய் நாகர்களும் சூர்யவம்சிகளை எதிர்க்கிறர்கள். இப்போது சூர்யவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: ‘தீமை தலை விரித்தாடும் போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும்போது - ஒரு வீரன் வருவான்.’ சிவா முத்தொகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப் பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய், மகாதேவராய் மாற்றிய கதை இது...
Read More
  • 73 Episode
  • Details