கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி. நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு.உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.காதல் என்பது வெறும் ஆர்மோன்களின் விளையாட்டு என்று பேசித் திரியும் விந்தை மனிதர்கள் கூட இந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்த பின் அதனை ஆத்மாவின் ராகம் என்று உணருவார்கள்.Read More