தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது. தொகுப்பிலேயே பிரமிக்கவைத்த படைப்பாளிகளில் தி. ஜானகிராமனுக்குத் தனி இடம் உண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுக் காலப் படைப்புப் பயணத்தில் அவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்தாலும் அந்தச் சாதனைகளின் வெளிச்சமோ காலத்தின் ஓட்டமோ அவருடைய முதல் தொகுப்பை எந்த வகையிலும் மங்கச் செய்துவிடவில்லை. அவரது படைப்புகளில் முக்கியமானது இந்த கொட்டு மேளம்












