Unlock 7 Day Free Trial of exclusive premium membership for just $2!
Start Free Trialஅக்காவின் குடை — Episode 11 in Tamil. அக்கா விஜியும், தங்கை ஜெயாவும், விஜிக்குக் கல்யாணம் ஆவதற்கு முன் ஈருடல் ஓருயிர் போலத்தான் பழகினார்கள். அக்காவைப் பெண்பார்க்க வந்த வைத்தியை ஜெயாவுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தன் ஆசை அக்காவுக்கு வைத்தி சற்றும் பொருத்தமே இல்லை என்று அவள் கணித்ததை வீட்டில் யாருமே மதிக்கவில்லையே? ஜெயாவுக்கு மனமுதிர்ச்சியே கிடையாதாம். வைத்தியைத் தான் விஜி அக்கா சம்மதித்துக் கட்டிக்கொண்டாள். ஜெயாவுக்கு அக்கா மீது கோபம்; வருத்தம்; பரிதாபம். வேலைக்குப் போக ஆரம்பித்த ஜெயா, அலுவலக ரீதியில் நட்பான செல்வகுமாரின் மீது காதல் வயப்படுகிறாள். அழகனாயும், புத்திசாலியாயும், தான் கற்பனை செய்த ஆண்மகனாகவும் அமைந்துவிட்ட செல்வாவை வைத்தியோடு ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறாள் ஜெயா. ஆனால் அவள் காதலுக்கு அந்த வைத்தியே வில்லனாய் முளைத்தது எப்படி? ஜெயா தனது மிகச் சிறந்த தேர்வாய் அமைந்தவனின் கரம் பிடித்தாளா?