சமூக அவலங்களை, சமூகத்தின் சாதாரண வகுப்பைச் சேர்ந்த - ஆனால் சமுதாயத்தின் தடையில்லா ஓட்டத்திற்கு தேவையான பணிகளைச் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வியலை காவியமாக எழுதி மக்களின் மனதில் பதிய வைப்பவர் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நமக்கு கரிப்பு மணிகள் நாவல் வாயிலாக எடுத்துக்காட்டிய இவர், இந்நூலில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் நிலை மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை அவலங்களை மிக அழகாகச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். விவசாயம், விவசாயிகளின் வாழ்க்கையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இராஜம் கிருஷ்ணனின் இந்நாவல் விளங்குகிறது.











