ஸ்டில் போட்டோகிராபரான ராஜா தனக்கென ஒரு ஸ்டூடியோவை அமைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறான். ஒரு நாள் அவன் கீதா எனும் அழகிய பெண்ணை சாலையில் பார்த்து விடுகிறான். அப்போது அவளை திருட்டுத்தனமாக ஒரு போட்டோவும் எடுத்து விடுகிறான். ராஜாவுக்கு அப்போது தெரியவில்லை. அந்த போட்டோ அவன் வாழ்க்கையைப் பந்தாடப் போகிறது என்று. கீதா மீது ராஜா வைத்த காதல் ஒருதலைக் காதலாகவே முடிகிறது. அதன் பின் வேறொரு திருமணம் செய்து கொண்ட ராஜா தன் மனைவியிடம் கீதாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து, பெரும் தவறு செய்கிறான். அவன் செய்த அந்தத் தவறினால் அவன் எப்படியெல்லாம் அலைந்தான், எப்படி எல்லாம் உருண்டு பிரண்டான் என்பதை கேளுங்கள். எஸ்.வி.சேகரின் மனைவிகள் ஜாக்கிரதை எனும் இந்த நகைச்சுவையான நாடகத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேட்டு சிரியுங்கள்...Read More