விஞ்ஞானி ராமநாதன் ஒரு மாத்திரையை கண்டுபிடிக்கிறார். காலத்தில் பின்னோக்கி அழைத்துச் செல்லும் டைம் மெஷின் மாத்திரை அது. அந்த மாத்திரையை தாம்பூல தட்டில் இருக்கும் வெற்றிலைகளில் மடித்து வைத்து விடுகிறார் அவர். அது தெரியாமல் சினிமா கதை விவாதத்திற்கு வந்த அனைவரும் உண்டு விடுகிறார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து காலத்தில் பின்னோக்கி பயணிக்கிறார்கள். முதலில் கட்டபொம்மனை சந்தித்து அவனுக்கே சிவாஜியின் கட்டபொம்மன் பட வசனத்தை கற்பிக்கிறார்கள், அதன்பின் ஷாஜகான் காலத்திற்கு பயணித்து கலாட்டா செய்கிறார்கள். இறுதியாக அவர்கள் மகாபாரதம் காலத்திற்கு சென்று மங்காத்தா ஆடுகிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் குழப்பத்தை விளைவிக்கிறார்கள். வசனகர்த்தா ஏகலைவனும் அவன் குழுவும் மீண்டும் தங்கள் காலத்திற்கு திரும்பினார்களா இல்லை அங்கேயே மாட்டிக் கொண்டார்களா? கலகலப்பான இந்த நகைச்சுவை நாடகத்தை உங்கள் குக்கூ எஃப் எம் இல் கேட்டு மகிழுங்கள்...
Read More