சென்னையிலேயே மிகவும் பிரபலமான சி.ஐ.டி கணேஷ், பத்திரிக்கைகளில் முகமூடி எனும் புனைப்பெயரில் மர்ம நாவல்கள் எழுதி வருகிறார். அவரின் கதைகளுக்கு மியா எனும் ரசிகை ஒருத்தி இருக்கிறாள். இருவரும் முகத்தைக் காணாமலேயே காதலிக்கிறார்கள். சி.ஐ.டி கணேஷை தேடி ஒரு கேஸ் வருகிறது. தொலைந்து போன பெண் ஒருத்தியை கண்டுபிடிக்க கணேஷ் நியமிக்கப்படுகிறான். இடையில் காதலி மியா அவன் வாழ்க்கையில் நுழைகிறாள். போட்டியாக இருக்கும் மற்றொரு சி.ஐ.டி கணேஷின் கேஸை குழப்புகிறான். மர்ம நாவல் எழுத்தாளர் இந்த மர்மங்களைக் கண்டுபிடித்தாரா? அல்வா எனும் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை மர்ம நாடகத்தை குக்கூ எப்.எம்.ல் கேட்டு மகிழுங்கள்.Read More