சிறுவயதிலேயே தொலைந்து போன தனது மாமன் சிதம்பரத்தை தேடுகிறாள் சித்ரா. சித்ராவின் வாழ்க்கையில் காதலுடன் நுழைகிறான் கோபி. கோபிக்கும் சித்ராவுக்கும் இடையே காதல் வளர்ந்து பூத்து செழிக்கும் நேரத்தில் தொலைந்து போன சித்ராவின் மாமா சிதம்பரம் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருவதாக செய்தி தருகிறார். சிதம்பரம் தன் மகனுக்கு சித்ராவை மணம் செய்ய வருவதை அறிந்த கோபி உள்ளே புகுந்து ஆள் மாறாட்டம் செய்கிறான். சிங்கப்பூர் சிதம்பரமாக தன் மேனஜரை நடிக்க வைக்கிறான். அதே நேரம் சிதம்பரமும் வருகிறார். சிரிப்பை கிளப்பும் சம்பவங்களும் நடக்கிறது. சித்ராவும் கோபியும் ஒன்று சேர்ந்தார்களா? எஸ்.வி.சேகரின் ’எல்லாமே தமாஸ் தான்’ டிராமாவை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேட்டு சிரியுங்கள்...Read More