நிறைய உறவுகள் கொண்ட குடும்பத்தில் நட்பே உறவுகளாய் அமைவது அபூர்வம். அத்தகைய பெரிய குடும்பத்தில் திடீர் திடீரென சில சம்பவங்கள் நடக்கின்றன. தங்களை பின் தொடர்வது போல் இருக்கும் அந்த அமானுஷ்யங்கள் என்ன... அதன் பிண்ணனி என்னவாக இருக்கும்? ஒரு வேளை விட்ட குறை தொட்ட குறையாக இருக்குமா? என்று அந்த குடும்ப மாந்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்க...அந்த சமயத்தில் பத்திரகாளி அம்மனின் அருளால் அவர்களுக்கு சில விஷயங்கள் புலப்பட ஆரம்பிக்கிறது... அதன்படி நடப்பவர்கள் இறுதியில் உண்மையை கண்டறிந்தார்களா இல்லையா என்பதே இந்த கதையின் முடிவு... திகில் காட்சிகளோடு காமெடி கலாட்டாக்களும் நிறைந்த சுவாரசியமான கதை...Read More