சித்ராவிடம் அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் ஒரு சிறிய சூட்கேஸை கொடுத்து பத்திரமாய் வைத்திருந்து, ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அந்த சூட்கேஸை வாங்கியதிலிருந்து அவளுக்குப் பிரச்னைகள் வருகின்றன. அதில் அப்படி என்ன தான் இருக்கிறது. அதிலிருந்து எப்படி தப்பித்தாள்?
