ஒரு நல்ல பத்திரிகையாளனாக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வரும் கதாநாயகனுக்கு ஒரு அரசியல்வாதியின் அறிமுகம் கிடைக்கிறது. அவருக்கு மேடைப் பேச்சுகள் தயாரித்துக் கொடுக்கிறான். அந்த அரசியல்வாதி அவனைப் பகடைக் காயாக்கி தன் அரசியல் எதிரியைப் பழி வாங்கத் திட்டமிடுகிறார். அதை அறியாத அப்பாவி கதாநாயகன் அவரின் சதியில் சிக்கிக்கொள்கிறான். பெரும் பெரும் முதலைகளின் நடுவே சிக்கிக்கொள்ளும் அப்பாவி கதாநாயகனின் நிலை என்ன ஆனது? தன்னை ஆபத்தில் சிக்க வைத்த அரசியல்வாதியைப் பழித் தீர்த்தானா? பரபரப்பான இக்கதையை உங்கள் குக்கூ எஃப்எம் ல் கேளுங்கள்.Read More