வேப்பமரத்தடியில் ஒரு ஜோதிடர் சிட்டுக்குருவியை வைத்து ஜோதிடம் பார்த்தார். அந்த சிட்டுக்குருவியானது தன்னால் வானில் பறக்க முடியவில்லையே என நினைத்து வருந்தியது. ஒரு நாள் ஜோதிடர் மரத்தடியில் உறங்கி கொண்டிருக்க ஒரு சிறுவன் அவ்வழியே சென்றான், அவனுக்கு ஜோதிடம் பார்க்க வேண்டும் என ஆசை ஆனால் அவனிடம் போதிய அளவு பணம் இல்லை. எனவே சத்தம் இல்லாமல் வந்து குருவியின் கூட்டை திறந்தான் அது ஒரு சீட்டை எடுத்து கொடுத்து விட்டு உள்ளே சென்றது. அச்சிறுவன் கூட்டை மூடாமல் சென்றதால் சிட்டுக்குருவி வெளியே சென்று தன் இனத்துடன் சேர்ந்து கொண்டது. நம் அரசாங்கம் ஜோதிடம் பார்ப்பது தவறு என ஒரு சட்டத்தை கொன்டு வந்ததால் அனைத்து சிட்டுகுருவிகளும் மகிழ்ச்சியாக பறந்தன.Read More