கல்கியின் சிறு கதைகளில் ஒன்று பிரபல நட்சத்திரம். இக்கதையில் வரும் பெண் சாதாரண குடும்பத்தில் பிறந்து பின் ஒரு பிரபல நட்சத்திரமாக மாறுகிறாள். இதனால் அவளை பற்றிய ஒவ்வொரு செய்தியும் தினந்தோறும் மக்களிடையே பரவி வந்தது. மேலும் அவள் பிரபலமாக இருக்கும் போது அவள் அனுபவிக்கும் பல பிரச்சனைகள் பற்றி இக்கதையில் காணலாம். அப்பிரச்னைகளினால் அவள் தனது பிரபல நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறாள். இதனால் அவள் தன் உயிரை விட வேகவதி ஆற்றில் குதிக்க முயல்கிறாள். இக்கதையை பிரபலமாக விரும்பும் அனைத்து பெண்களும் படிக்க வேண்டியது அவசியம்.Read More