தமிழகத்தை அறத்துடன் ஆண்டு வந்த சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் மூன்றும் 14 - ம் நூற்றாண்டில் ஒன்றுமில்லாமல் போகின்றன. அந்த நேரத்தில், கில்ஜியின் ஏவல் படையுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறான் கொள்ளைக்காரன் மாலிக் காபூர். தமிழ்நாடு சுல்தானின் படையிடம் சிக்கிக் கொள்கிறது. மதுரையில் சுல்தான்களின் ஆட்சி அமைகிறது. இப்போது வளமான தமிழகத்தினை தங்கள் பங்கிற்கு கூறுபோட தெலுங்கு அரசர்களின் விஜயநகரப் பேரரசும் தமிழகத்தினுள் நுழைவதற்கு திட்டமிடுகிறது. அவர்களை எதிர்க்கத் தயாராகிறார்கள் கடைசித் தமிழ் அரச குலமான சம்புவரையர்கள். சம்புவரையர்களின் முயற்சி வெற்றிபெற்றதா? மீண்டும் தமிழ்நாட்டில் தமிழர் கொடி பறந்ததா? விறுவிறுப்பான இந்த சரித்திர காவியத்தை உங்கள் குக்கூ எப்.எம்.ல் கேளுங்கள்...Read More