சிவகாமியின் சபதம் பாகம் ஒன்றில் அறிமுகமான பரஞ்சோதி அரசரின் நன்மதிப்பைப் பெற்று, எப்படி படைத்தலைவராகி - நரசிம்ம வர்மரின் நண்பர் ஆகிறார் என்று தொடங்குகிறது இந்த இரண்டாம் பாகம். இந்த பாகம், நாகநந்தியின் சதியால் சிவகாமி மற்றும் ஆயனார் ஆபத்தில் மாட்டிக் கொள்வதையும், அவர்களை நரசிம்ம வர்மர் தக்க சமயத்தில் காப்பாற்றி மீட்பதையும் விவரிக்கிறது. இதில் காதலர்களான சிவகாமியும் நரசிம்மரும் ஒருவரை ஒருவர் காணாமல் தவிப்பது நம் நெஞ்சங்களிலும் தவிப்பை ஏற்படுத்துவதாய் அமைந்து இருக்கிறது.Read More