கொடையின் ஊற்றாய் விளங்கும் தேசத்தின் மீது விழுந்த கொடும் சாபம். தவமிருந்து தன்னவனுடன் இணையும் கொடையூர்புரத்தின் இளவரசியோடு புகுந்தகம் புகும் சாபம் ஏற்படுத்தும் போராட்டங்கள். புயலாய் புரட்டும் சாபத்தை முறிக்கப் போராடும் இணைந்த இதயங்கள். அவர்களோடு கை கோர்த்து துன்பத்தைப் பகிரும் பேரன்பு மிக்கத் தோழமைகள். மீண்டு வருமா கொடையூர்புரத்து இளவரசியின் வாழ்க்கை. அன்பு, நேசம், நட்பு, வீரத்தோடு இணைந்து எதிர்பாரா முடிவை எதிர்நோக்க தொடர்ந்து வாருங்கள் கொடையூர்புரத்து ரகசியத்தோடு.