கல்கியின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று ஒற்றை ரோஜா. இந்த நூல் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலில் மொத்தம் நாற்பத்து ஆறு பக்கங்கள் உள்ளன. ஒற்றை ரோஜா எனும் இந்த நூலில் இளம் வயதில் உள்ள ஒரு ஆணும் பெண்ணும் இரயில் பயணத்தின் போது சந்திக்கின்றனர். இவ்விருவரும் சென்னையை நோக்கி புறப்படுகின்றனர். இளம் வயதினை உடைய அப்பெண் இலங்கையில் இருந்து வருகிறாள், அந்த இளைஞனின் சொந்த ஊர் சென்னை. இவ்விருவரும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்படுகின்றனர். இருவரும் தேர்வில் தோல்வி அடைந்ததால் தங்களது வாழ்க்கையை முடித்து கொள்ள செல்கின்றனர்.Read More