சமுத்திரம் அவர்கள் எழுதிய இந்த நாவல் கண்ணால் கண்டு, செவியால் கேட்டு, நன்கு தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகள் ஒரு சிலவற்றின் ஒட்டு மொத்தமான உருவமாக விளங்குகிறது. நிலப் பிரபுத்துவத்தின் ஆணவம், அரசாங்க அதிகாரிகளின் ஏனோதானோப் போக்குகள், முதலாளித்துவத்தின் கபடம், கிராமங்கள் இக்காலத்தில் நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவல் முற்போக்கான வகையில் எழுதப்பட்டுள்ளது. Read More