"கல்கி எழுதிய சிறந்த புதினங்களுள் தியாக பூமியும் ஒன்று. இது சமூக புதினங்களுள் ஒன்று ஆகும். கல்கி இப்புதினத்தில் காந்தியக் கருத்துக்களை மிகச்சிறந்த நிகழ்ச்சிகள் வாயிலாகவும், கதாபாத்திரங்கள் வாயிலாகவும் வெளியிட்டு உள்ளார். 1938 - 1939 கால இடைவெளியில் இப்புதினம் வெளியிடப்பட்டது. இப்புதினத்தின் முதல் பாகத்தின் பெயர் கோடை. இதில் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. இப்பாகமானது ரயிலடி என்னும் அத்தியாயத்தில் தொடங்கி எனை மணந்த மணவாளன் என்னும் அத்தியாத்துடன் முடிவடைகிறது.
இப்புதினமானது தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இப்புதினத்தின் இரண்டாவது பாகத்தின் பெயர் மழை, இதில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இந்த பாகம் வெள்ளம் என்ற அத்தியாயத்தில் தொடங்கி வண்டி வந்தது என்ற அத்தியாயத்துடன் முடிவு பெறுகிறது."Read More
"கல்கி எழுதிய சிறந்த புதினங்களுள் தியாக பூமியும் ஒன்று. இது சமூக புதினங்களுள் ஒன்று ஆகும். கல்கி இப்புதினத்தில் காந்தியக் கருத்துக்களை மிகச்சிறந்த நிகழ்ச்சிகள் வாயிலாகவும், கதாபாத்திரங்கள் வாயிலாகவும் வெளியிட்டு உள்ளார். 1938 - 1939 கால இடைவெளியில் இப்புதினம் வெளியிடப்பட்டது. இப்புதினத்தின் முதல் பாகத்தின் பெயர் கோடை. இதில் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. இப்பாகமானது ரயிலடி என்னும் அத்தியாயத்தில் தொடங்கி எனை மணந்த மணவாளன் என்னும் அத்தியாத்துடன் முடிவடைகிறது.
இப்புதினமானது தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இப்புதினத்தின் இரண்டாவது பாகத்தின் பெயர் மழை, இதில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இந்த பாகம் வெள்ளம் என்ற அத்தியாயத்தில் தொடங்கி வண்டி வந்தது என்ற அத்தியாயத்துடன் முடிவு பெறுகிறது."